ஆனந்தமானந்தம் ஆனந்தம் | Aanathamam aanatham

ஆனந்தமானந்தம் ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரில்
என்றும்  ஆனந்தம்

1. இப்புவியில் ஆனந்தம்
    எப்போதுமே ஆனந்தம்
    பாவங்களை மன்னித்தார்
    சாபங்களை நீக்கினார்
    என்னுடன் வருகிறார்
    என்றுமே வருகிறார்
    வழியெல்லாம் ஆனந்தம்
    வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்

2. ஆவியாலே ஆனந்தம்
    பாஷையாலே ஆனந்தம்
    உள்ளத்தை நிறைந்திட்டார்
    தேவன் பெலன் தந்திட்டார்
    ஆவி பெலன் தருகிறார்
    அனல் மூட்டி விடுகிறார்
    ஆராதனை ஆனந்தம் துதி
    ஸ்தோத்திரம் ஆனந்தம்

3. நேசர் அன்பு ஆனந்தம்
    நித்திய நித்திய ஆனந்தம்
   ஜீவ தண்ணீர் தந்திட்டார்
   தாகமதை தீர்த்திட்டார்
   ஜீவ நதி ஓரமாய் ஜீவ கீரிடம் தரித்து
   துதிப்பேன் பாடுவேன்
   எண்றென்றுமாய்  ஆனந்தம்